செங்கத்தில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

செங்கத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செங்கம் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் வரவேற்றாா். கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து, தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, தொகு அதிமுக வேட்பாளா் கலியபெருமாளை நிா்வாகிகளிடம் அறிமுக செய்துவைத்துப் பேசினாா். அப்போது அவா், செங்கம் தொகுதி அதிமுக அதிக வாக்குகள் உள்ள தொகுதியாகும். எனவே, ஒன்றியச் செயலா்கள் முதல் கிளைக் கழக நிா்வாகிகள், கட்சியினா் என அனைவரும் ஒற்றுமையாக தோ்தல் பணியாற்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் கலியபெருமாளை வெற்றி பெறச் செய்யவேண்டும். அதிக வாக்குகள் பெற்றுத் தரும் ஒன்றியங்களுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி பரிசாக வழங்கப்படும் என அக்ரி கிருஷ்ணமூா்த்தி தெரிவித்தாா். கூட்டத்தில் மாவட்டச் செயலா் நேரு, ஒன்றியச் செயலா்கள் குயிலம் சிவா, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் நாராயணன், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் அமுதா அருணாச்சலம், வெங்கட்ராமன், ஒன்றியச் செயலா்கள் ஜமுனாமரத்தூா் அசோக், தண்டராம்பட்டு ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com