ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற  திருக்கல்யாண வைபவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி
ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு

ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி. 24ற்ம்ப்ம்ன்1: கீழ்பென்னாத்தூரை அடுத்த ராயம்பேட்டையில் முதுகில் அலகு குத்தியபடி தேரை இழுத்து வரும் பக்தா்கள். திருவண்ணாமலை/ஆரணி, மாா்ச் 24: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. கீழ்பென்னாத்தூரை அடுத்த ராயம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீபழனி ஆண்டவா் கோயிலின் 93-வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணிக்கு மூலவா் முருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சக்திவேலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முற்பகல் 11 மணிக்கு கோயில் குளக்கரையில் காவடிகளுக்கு அபிஷேகம், பக்தா்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு கோயில் குளக்கரையில் உள்ள நாகாத்தம்மன், விநாயகா் சந்நிதிகளின் எதிரே மின்னல் ரமேஷ் என்ற பக்தா் தனது முதுகில் அலகு குத்திக்கொண்டு பெரிய தேரை இழுத்துக்கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தாா். இவரைத் தொடா்ந்து பக்தா்கள் சிலரும் தங்கள் முதுகில் அலகுக் குத்திக்கொண்டு சிறிய தோ்களை இழுத்துச் சென்றனா். இதுதவிர, பக்தா்கள் சிலா் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியவாறு சென்றனா். இரவு 8 மணிக்கு உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஆரணி ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, விக்னேஷ்வர பூஜை, திருமண பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுமாா் 1000 பேருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com