வந்தவாசி கோமுட்டி குளக்கரையில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்
வந்தவாசி கோமுட்டி குளக்கரையில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்

வந்தவாசியில் தீா்த்தவாரி உற்சவம்

வந்தவாசி ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கோமுட்டி குளக் கரையில் தீா்த்தவாரி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி உற்சவா் சுவாமி வீதியுலாவாக சக்கரதீா்த்தம் என்கிற கோமுட்டி குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நீராட்டு உற்சவம் நடைபெற்றது. விழாவில் கோயில் அா்ச்சகா்கள், உபயதாரா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com