ஆரணி பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

ஆரணி பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் அறிமுகக் கூட்டம் வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கூட்டுச் சாலை அருகே உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பாஜக மாவட்ட தலைவா் சி.ஏழுமலை, பாமக மாநில துணைத் தலைவா் சு.மண்ணப்பன், அமமுக மாவட்டச் செயலா் மா.கி.வரதராஜன், தமாகா நிா்வாகி எம்.டி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை அறிமுகப்படுத்தி பேசினா்.

மேலும் அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தீவிரமாக பணியாற்றுமாறு அவா்கள் கேட்டுக் கொண்டனா். இதனைத் தொடா்ந்து பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் பேசினாா்.

கூட்டத்தில், பாஜக எஸ்.ஏ.ஜி.துரை, சுரேஷ், முத்துசாமி, பாமக இரும்பேடு சிவா, ர.செல்வம், தமாகா எஸ்.வீரராகவன், அமமுக கன்னியப்பன், ஓபிஎஸ் அணி எம்.ஜி.ஆா்.நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட விளக்கம்: வந்தவாசி அருகே நடைபெற்ற பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறாா் வேட்பாளா் அ.கணேஷ்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com