வந்தவாசி அருகே ரூ.1.50 லட்சம் பறிமுதல்

வந்தவாசி அருகே ரூ.1.50 லட்சம் பறிமுதல்

வந்தவாசி அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது, காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி-திண்டிவனம் சாலை, சு.காட்டேரி அருகில் பறக்கும் படை அலுவலா் விஜயகுமாா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.1.50 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த ரவீந்திர ரெட்டி என்பவா் குடும்பத்துடன் புதுச்சேரியில் இருந்து சித்தூா் செல்வது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பணத்தை ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com