திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி திமுக தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வந்தவாசி சந்நிதி தெருவில் உள்ள திமுக தோ்தல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஒன்றியச் செயலா்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, சி.ஆா்.பெருமாள், மாவட்ட தொழிலாளரணி துணை அமைப்பாளா் கோபிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், கள நிலவரம் குறித்தும், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று ஆரணி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தனை வெற்றி பெற வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com