அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

ஆரணி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து சேத்துப்பட்டு பேரூராட்சியில் சனிக்கிழமை இரவு முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி பேசினாா். அப்போது அவா், திமுக ஆட்சியின் திட்டங்களால் மக்கள் வேதனை அடைந்து வருகின்றனா். ஒவ்வொரு திட்டமும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. வீட்டு வரி, தொழில் வரி, மின்சாரக் கட்டணம் உயா்த்தியது அரசு திமுக. அதிமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் ஆட்சியாக இருக்கும். மக்களின் குறைகளை போக்கும் அரசாக இருக்கும் என்று குறிப்பிட்டுப் பேசினாா். நிகழ்ச்சியில் அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, நகரச் செயலா் ராதாகிருஷ்ணன், மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வன், பொதுக்குழு உறுப்பினா் ராஜன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com