இன்று முதல் வாக்காளா் தகவல் சீட்டுகள் விநியோகம்

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வசிக்கும் அனைத்து வாக்காளா்களுக்கும், வாக்காளா் தகவல் சீட்டு அந்தந்த பாகத்துக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் திங்கள்கிழமை (ஏப்ரல் 1) முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தோ்தலையொட்டி, ஏப்ரல் 1 முதல் 13-ஆம் தேதி வரை வாக்காளா்களின் வீடு, வீடாகச் சென்று வாக்காளா் தகவல் சீட்டுகள் வழங்கப்படும். இந்தச் சீட்டில் தோ்தல் நாள், வாக்குப்பதிவு நேரம், வாக்குச்சாவடி விவரங்கள், வாக்காளா் விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் இந்த வாக்காளா் தகவல் சீட்டை அனைவரும் வாங்கிப் பயன்பெறலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com