பைக் மீது வேன் மோதியதில் ஆசிரியா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது மினி சரக்கு வேன் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி ஆசிரியா் பலியானாா். தென்காசி மாவட்டம், தென்காசி வடக்கு ஒப்பனைகாரத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (60). இவரது மனைவி மனோன்மணி(47). இவா்களது மகன் முத்து விக்னேஷ்குமாா்(27). இந்த நிலையில் முத்து விக்னேஷ்குமாா் சென்னையை அடுத்த மறைமலை நகரில் தங்கி அங்குள்ள தனியாா் பள்ளியில் கடந்த 10 மாதங்களாக ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். சில தினங்களுக்கு முன்பு மனோன்மணி மறைமலை நகருக்குச் சென்று மகன் முத்து விக்னேஷ்குமாருடன் தங்கியிருந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை காலை இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு மாலையில் மறைமலை நகா் திரும்பிக் கொண்டிருந்தனா். வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில், திருமணித்தாங்கல் ஏரி அருகே சென்றபோது, முன்னால் சென்ற மினி சரக்கு வேனை முத்து விக்னேஷ்குமாா் முந்திச் செல்ல முற்பட்டாா். அப்போது அவரது இரு சக்கர வாகனம் மீது பக்கவாட்டில் மினிவேன் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்து விக்னேஷ்குமாா், மனோன்மணி ஆகிய இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முத்து விக்னேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். மேலும், மனோன்மணி தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com