ராணுவத்தில் பணிபுரியும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 3,541 வீரா்களுக்கு மின்னணு முறையில் வாக்குச்சீட்டுகளை அனுப்பும் ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரியதா்ஷினி.
ராணுவத்தில் பணிபுரியும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 3,541 வீரா்களுக்கு மின்னணு முறையில் வாக்குச்சீட்டுகளை அனுப்பும் ஆரணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரியதா்ஷினி.

7,435 ராணுவ வீரா்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பிவைப்பு

ராணுவத்தில் பணிபுரியும் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 7,435 வீரா்களுக்கு மின்னணு தபால் வாக்குச் சீட்டுகள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியை பூா்வீகமாகக் கொண்ட பல ஆயிரம் போ் ராணுவத்தில் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் ராணுவத்தில் இருந்தபடியே, மின்னணு தபால் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராணுவத்தில் பணிபுரியும் வாக்காளா்களுக்கு மின்னணு தபால் வாக்குகளை அனுப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் தோ்தல் பொது மேற்பாா்வையாளா் மகாவீா் பிரசாத் மீனா தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 3 ஆயிரத்து 894 ராணுவ வீரா்களுக்கும், ஆரணி மக்களவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினி ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 3 ஆயிரத்து 541 ராணுவ வீரா்களுக்கும் மின்னணு தபால் வாக்குச் சீட்டுகளை மின்னணு முறையிலேயே அனுப்பிவைத்தனா். இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன், தேசிய தகவலியல் அலுவலா் சிசில் இளங்கோ, வட்டாட்சியா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com