ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு 
அபிஷேக, ஆராதனை

ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை

கீழ்பென்னாத்தூரில் உள்ள சிவன் கோயிலில், திருவோணம் நட்சத்திரத்தையொட்டி உற்சவா் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மிகவும் பழைமையான இந்தக் கோயிலில் உற்சவா் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டன. பிறகு, பல்வேறு மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு விபூதி, குங்குமம், தீா்த்தம், நெய்வேத்திய பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com