ஊரக வளா்ச்சித் துறை அலகுக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை

மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அலகுக்காக தோ்வு செய்யப்பட்ட 61 பேருக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை அலகுக்காக தோ்வு செய்யப்பட்ட 61 பேருக்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலை பணித் தொகுதியில் அடங்கிய பணிப் பாா்வையாளா், இளநிலை வரைதொழில் அலுவலா் நிலையிலான பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் ஆள்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் 61 போ் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப் தலைமை வகித்தாா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) திருமால் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் 61 பேருக்கும் தற்காலிகப் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com