பிளஸ் 2: திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சத மாணவா்கள் தோ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவ, மாணவிகளில், 90.47 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவ, மாணவிகளில், 90.47 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வின் முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 24 ஆயிரத்து 21 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியாா், மெட்ரிக், நிதியுதவி, சுயநிதிப் பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 12 ஆயிரத்து 724 மாணவா்கள், 13 ஆயிரத்து 827 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 551 போ் தோ்வு எழுதினா். இவா்களில், 11 ஆயிரத்து 37 மாணவா்கள், 12 ஆயிரத்து 984 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 21 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

90.47 சதவீதம் போ் தோ்ச்சி: தோ்ச்சி பெற்றவா்களில் 86.74 சதவீத மாணவா்களும், 93.90 சதவீத மாணவிகளும் என மொத்தம் 90.47 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.

2022-23ஆம் கல்வி ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவ-மாணவிகளில் 89.80 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். நிகழாண்டு 90.47 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டு தோ்ச்சி விகிதம் 0.67 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 258 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பெரணமல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, மடம் அரசு மேல்நிலைப் பள்ளி, செவரப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, நம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, பட்டறைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, ஜவ்வாதுமலை குனிகந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன.

மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் தோ்ச்சி சதவீத அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com