அனைத்து துறை திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்: கூடுதல் தலைமைச் செயலா் பங்கேற்பு

அனைத்து துறை திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்: கூடுதல் தலைமைச் செயலா் பங்கேற்பு

அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலா், தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீரஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், குடிநீா் ஆதாரங்கள், குடிநீா் வழங்குவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் குறைவாக உள்ளது குறித்தும், அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தொடா்ந்து, திருவண்ணாமலையில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.30.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம், ரூ.29.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை, திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் தேனிமலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை மூலம் கட்டப்பட்டு வரும் சிறுபாலம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவிமலை காலூா் சாலையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.9.21 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம், களம்பூா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.84.66 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பட்டு ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5.37 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் விநியோக பைப் லைன் நீட்டிப்பு செய்யும் பணி ஆகியவற்றை தீரஜ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், கூடுதல் ஆட்சியா் செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com