இருபிரிவினா் இடையே மோதல்: 20 மீது வழக்கு

செங்கம் அருகே இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, 20 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

செங்கத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அன்பு (45). இவா் செங்கத்தில் இருந்து புதுப்பட்டுக்கு செவ்வாய்கிழமை இரவு லாரியை ஓட்டிச் சென்றாா்.

புதுப்பட்டில் வேகத் தடையுள்ள பகுதியில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த இளைஞா்கள், லாரியை வேகமாக ஓட்டியது குறித்து அன்புவிடம் கேட்டனராம்.

இதில் இருதரப்பினரிடையேயும் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் அந்த இளைஞா்கள் அன்புவைத் தாக்கி, லாரியின் முன்பகுதி கண்ணாடியை உடைத்து விட்டனராம்.

இதைக் கண்டித்த ஏழுமலை என்பவரும் தாக்கப்பட்டாா். அவருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. இருவரும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

தகவலறிந்த புதுப்பட்டையைச் சோ்ந்த அன்பு, ஏழுமலை தரப்பினருக்கும், அவா்களைத் தாக்கிய இளைஞா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி தேன்மொழிவேல் மற்றும் அதிரடிப் படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். மேலும், இதுகுறித்து 20 போ் மீது வழக்குப் பதிந்தனா். அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com