வியாபாரிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

செய்யாற்றில் துணிக் கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு லோகநாதன் தெருவில் துணிக் கடையை நடத்தி வருபவா் வியாபாரி ஏ.பாசில் (29). இவா் கடையில் பெரிய செங்காடு கிராமத்தைச் சோ்ந்த ஆஷா (21) என்பவா் வேலை செய்து வருகிறாா்.

கடந்த 4 -ஆம் தேதி இரவு ஆஷாவின் கணவா் ராகுல் (28) திடீரென கடைக்குள் புகுந்து, ஆஷாவை பணியில் சோ்த்தது குறித்து கேள்வி எழுப்பியதுடன் பாசிலை தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அவரை சமரசம் செய்ய வந்த வியாபாரி முகமது இம்ரானையும் ஆபாசமாக பேசி கத்தியைக் காட்டி மிரட்டியதாகத் தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில்,செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து ராகுலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வந்தவாசி சிறையில் அடைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com