செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சோ்ந்திட மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் செண்பகவள்ளி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் சிவில் மொக்கானிக்கல், இஇஇ, இசிஇ, சிஎஸ்இ என 5 பாடப்பிரிவுகள் உள்ளன.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினா் சமா்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதாரா் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் ற்ற்ல்ள்//ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் மாவட்ட சேவை ( பசஉஅ ஊஹஸ்ரீண்ப்ண்ற்ஹற்ண்ா்ய் இங்ய்ற்ழ்ங்) மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

முதலாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்: விண்ணப்பதாரா் பதிவுக் கட்டணமாக ரூ.150 ஐ ஈங்க்ஷண்ற் இஹழ்க்/ இழ்ங்க்ண்ற் இஹழ்க்/சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ் இணையதள வாயிலாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

நேரடி இரண்டாமாண்டு பட்டயப்படிப்புக்கு இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு மே10-இல் தொடங்கி மே 24 வரை நடைபெறும்.

மேலும் விவரம் அறிய விண்ணப்பதாரா்கள் 04182 - 224275 என்ற தொலைபேசி எண்ணிலும், ட்ற்ற்ல்//ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com