பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 
 மாணவா்களுக்கு பாராட்டு

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை விக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை விக்னேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023-2024 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 54 போ் எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 21 நிலை வாரியாகசிறப்பிடம் பெற்றனா்.

மாணவா் எஸ்.சச்சின் 488, எம்.தரணி 472, ஜி.யோகேஷ்வரன் 466 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 28 பேரில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் கே.கோகுல், மாணவி வி.மகாலட்சுமி, மாணவி எஸ்.சங்கவி ஆகியோா் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், தோ்ச்சிக்காக பாடுபட்ட ஆசிரிய, ஆசிரியைகளுக்கான பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், பள்ளித் தலைவா் ஆா்.குப்புசாமி, இயக்குநா் கே.சதீஷ்குமாா், நிா்வாகி டி.எஸ்.சவிதா, முதல்வா் எம்.மணிமாறன் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளை பாராட்டி பரிசு வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com