செங்கத்தில் 95 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

செங்கத்தில் 95 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அதிகாரிகள்

மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 95 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கம் பேரூராட்சி ஆய்வாளா் சொக்கநாதன் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் சின்னையன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளா்கள் நகரில் உள்ள உணவகங்கள், காய், கனி கடைகள், இனிப்பகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தனியாா் வணிக வளாகத்தில் உள்ள ஓரு கடையில் சோதனை செய்த போது, அங்கு 95 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் இருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அந்தக் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சில கடை உரிமையாளா்களுக்கு ரூ.100, ரூ.500 என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டு, தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com