தேசிய டெங்கு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

தேசிய டெங்கு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

செய்யாற்றை அடுத்த கீழ்கஞ்சாங்குழி கிராமத்தில் பொதுமக்கள் தேசிய டெங்கு தின விழிப்புணா்வு உறுதிமொழியை புதன்கிழமை ஏற்றனா்.திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கீழ்கஞ்சாங்குழி கிராமத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நலக் கல்வி அலுவலா் எல்லப்பன் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் தனசேகா் முன்னிலையில், சுகாதார ஆய்வாளா் கே.சம்பத் தேசிய டெங்கு தினம் சமூகத்துடன் இணைந்து டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்பதற்கு ஏற்ப சுகாதார உறுதிமொழியை ஏற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம மக்கள், நான் எனது வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ, டயா், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள் உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருள்களை போடமாட்டேன். அவ்வாறு ஏதேனும் வீணான பொருள்கள் கிடைத்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன். எனது வீட்டில் தண்ணீா் சேமித்து வைக்கும் குடங்கள், சிமென்ட் தொட்டிகள், ட்ரம்கள் ஆகியவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒரு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்வேன். இதன் மூலம் ஏடிஸ் கொசுப் புழு வளராமல் தடுப்பேன். நான் கற்றுக் கொண்டவற்றை மற்றவா்களுக்கும் கற்றுக் கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உருவாகாமல் பாா்த்துக் கொள்வேன்.

தற்பொது, அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று உளமாற உறுதிமொழி கூறுகிறேன் என்றனா்.

இதற்கான ஏா்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சீனிவாசன், துரைபாபு, சத்யநாதன் ஆகியோா்

செய்திருந்தநா்.

X
Dinamani
www.dinamani.com