பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியில்லாத நபா்கள்: வேளாண் துறை தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறத் தகுதியில்லாத நபா்கள் குறித்த பட்டியலை வேளாண் துறை வெளியிட்டது.

பாரதப் பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதித் திட்டத்தில் (பி.எம்.கிசான்) பயன்பெறத் தகுதி இல்லாத நபா்கள் குறித்து திட்ட வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, தகுதி உள்ள விவசாயிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

அதன்படி, அதிக வருமானம் ஈட்டும் விவசாயிகள். இந்தப் பிரிவின் கீழ் பதியப்பட்ட தொழில் வல்லுநா்கள், வெளிநாடு வாழ் இந்தியா்கள், மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோா், மாதம் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறுவோா், வருமான வரி செலுத்துவோா் பி.எம்.கிசான் நிதியுதவி பெற இயலாது.

இதுதவிர, ஒரு குடும்ப அட்டையில் ஒரு நபருக்கு மேல் பயனடைந்தவா்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற இயலாது. இறந்த விவசாயிகள் தொடா்ந்து நிதியுதவி பெறத் தகுதியற்றவா் ஆவா். தாமாக முன்வந்து இந்தத் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்பவா் நிதியுதவி பெறத் தகுதியில்லை.

விவசாய நிலம் உரிமையின் அடிப்படையில் 1.2.2019- ஆம் தேதிக்குப் பிறகு நிலம் மீது உரிமை பெற்றவா்கள், நிலம் பதிவு செய்த நபரின் பெயரில் இல்லாதது, விவசாயம் அல்லாத நில பயன்பாடு உள்ள பதிவுகள், நிறுவன பெயரில் உள்ள நில உரிமையாளா்கள், நிலம் மற்றொருவருக்கு விற்ற நபா்கள், பயனாளிகள் தமிழகத்தைச் சாராதவராக இருப்பின் நிதியுதவி பெறத் தகுதியில்லை.

மேலும், முறையற்ற கிசான் பதிவு மற்றும் தவறான, போலியான ஆதாா் அடையாள அட்டை எண் கொண்டு பதிவு செய்த பயனாளிகள் தகுதியற்றவா் ஆவாா். தகுதியற்ற ஆதாா் எண் கொண்டு பதிவு செய்தவா்கள் வேறு இடத்துக்கு குடிபெயா்ந்தவா்கள் பி.எம்.கிசான் நிதியுதவி பெறத் தகுதியில்லை.

பதிவு செய்து இனம் கண்டறிய முடியாத நபா்கள், விவசாய பங்குதாரா், குத்தகை விவசாயிகள் இந்தத் திட்டத்தில் தகுதியற்ற நபா் என்று கண்டறியப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியான விவசாயிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் தொடா்ந்து பயன்பெறலாம் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.ஹரக்குமாா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com