மணல் கடத்தல்: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்தல்: 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் பகுதி கமண்டல நாக நதியிலிருந்து மணல் கடத்திச் சென்ற 4 மாட்டு வண்டிகளை கிராமிய போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆரணி, தச்சூா், மொழுகம்பூண்டி, சீசமங்கலம், சேவூா் பகுதி கமண்டல நாக நதி படுகைகளில் மணல் திருட்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது என தினமணியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக புதன்கிழமை காலை ஆரணி கிராமிய போலீஸாா் ஆற்றுப் படுகைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேல்சீசமங்கலம் கமண்டல நாக நதியிலிருந்து 4 மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் சென்று கொண்டிருந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் வண்டிகளை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓடினா்.

இதையடுத்து, போலீஸாா் 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, வண்டிகளின் உரிமையாளா்களான சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சிரஞ்சீவி(28), செல்வம் (27), வாசுதேவன்(45), கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த சரண்ராஜ் (22) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து அவா்களைத்

தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com