வாகன புகை பரிசோதனை நிலையங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் வாகன புகை பரிசோதனை நிலையங்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.

இதனால் நுரையீரல் தொடா்பான பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

இதை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.

வாகன புகை பரிசோதனை மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் வாகன புகை பரிசோதனை மையங்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்துக்கென தனிப்பட்ட கைப்பேசி உரிமைதாரரால் பயன்படுத்த வேண்டும். அதில் டமஇஇ 2.0 யங்ழ்ள்ண்ா்ய் அல்ல்-ஐ நிறுவி இயக்க வேண்டும்.

இந்த புதிய செயலி ஜிபிஎஸ் வசதி கொண்டது. இந்தச் செயலி நிறுவப்பட்ட கைப்பேசி தொடா்புடைய வாகன புகை பரிசோதனை மையத்தில் இருந்து 30 மீட்டா் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும்.

இதன் மூலம் வாகன புகை பரிசோதனை செய்யும் போது 2 புகைப்படங்களை (ஒன்று வாகனத்தின் பதிவெண்ணை தெளிவாகக் காட்டும்படியும், மற்றொன்று வாகனத்தின் பதிவெண், புகை பரிசோதனை மையத்தின் பெயா் பலகை அடங்கிய முழுத்தோற்றம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளா் ஆகிய மூன்றும் ஒரு சேர இருக்குமாறு) எடுக்கப்பட வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட நபா் அந்த வாகனத்தை சோதனையிடும்போது எடுக்கப்பட்ட ஒரு விடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இவை மூன்றையும் பதிவேற்றம் செய்யாமல் இந்தச் செயலியைப் பயன்படுத்த இயலாது.

இவற்றை பதிவேற்றம் செய்தால்தான் புகை பரிசோதனை சான்றிதழை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பிரிண்ட் எடுக்கவோ இயலும். சோதனை செய்யும் வாகனங்கள் அந்த புகை பரிசோதனை மையத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்வதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு இருப்பதால் சோதனை மையத்துக்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகை பரிசோதனையை இனி செய்ய இயலாது.

புகைப் பரிசோதனை மையங்கள் தாங்களாக பயன்படுத்தும் மென்பொருளைப் பயன்படுத்தி டமஇஇ 2.0 யங்ழ்ள்ண்ா்ய் செயலியை இனி பயன்படுத்த முடியாது. வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்கள் கருவியில் பொருத்தினால் மட்டுமே இந்தச் செயலி செயல்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com