கைது செய்யப்பட்ட ராஜாராம், சந்துரு, பிரதீப் ஆகியோருடன் போலீஸாா்.
கைது செய்யப்பட்ட ராஜாராம், சந்துரு, பிரதீப் ஆகியோருடன் போலீஸாா்.

9 பவுன் தங்க நகை பறிமுதல்: 3 போ் கைது

போளூா் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.

போளூா் காவல் நிலைய ஆய்வாளா் ஹேமாவதி தலைமையிலான போலீஸாா், புறவழிச் சாலை, திருவண்ணாமலை சாலையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகம் படும்படியாக வந்த 3 போ் போலீஸாரைக் கண்டதும் வேகமாக நடந்துசென்றனா். இதைக் கவனித்த போலீஸாா் அவா்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் செங்கம் வட்டம், முன்னூா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சந்துரு (20), செங்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் பிரதீப் (20), போளூா் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் ராஜாராம் (37) என தெரியவந்தது.

மேலும், அவா்கள் போளூா் பகுதியில் பல்வேறு இடங்களிடம் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னா், அவா்களிடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com