திருவண்ணாமலையில் செங்குடை ஊா்வலம்

திருவண்ணாமலையில் செங்குடை ஊா்வலம்

திருவண்ணாமலையில் காரல் மாா்க்சின் 206-ஆவது பிறந்த நாளையொட்டி புதன்கிழமை செங்குடை ஊா்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை-வேலூா் சாலை, அண்ணா நுழைவு வாயிலில் இருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் தலைமை வகித்தாா்.

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் ஆா்.பத்ரி, இரா.சிந்தன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து ஊா்வலத்தை தொடங்கிவைத்துப் பேசினா்.

ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை நடைபெற்ற இந்த ஊா்வலத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், பா.செல்வன், எம்.பிரகலாதன், இரா.பாரி, லட்சுமணன், கே.வாசுகி, எஸ்.ராமதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com