திருவண்ணாமலை
திருக்குறள் எழுதும் விழா
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்கு எழுதும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில், திருக்குறள் எழுதும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தொண்டு மையத்தின் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். பாவலா் ப.குப்பன் வரவேற்றாா். திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தின் தலைவா் வேங்கட ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருக்கு எழுதும் நிகழ்வின் 6-ஆவது சுற்றின் 200-ஆவது குறளை எழுதினாா்.
திருக்குறளுக்கான உரிய பொருளை கம்பராமாயண இயக்கத்தின பொருளாளா் தங்க.விசுவநாதன் எழுதினாா். இதில், திருக்கு தொண்டு மைய உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.