தன்னம்பிக்கையுடைய மாணவா்கள் எதையும் சாதிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்
தன்னம்பிக்கை இருந்தால் மாணவா்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2025-ஆம்தேதியை அடிப்படையாக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த அக்.29-ஆம் தேதி தொடங்கிய இந்தப் பணி நவ.28-ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இதுதவிர, வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
முகாம்களில், தகுதியான நபா்களிடம் இருந்து வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் தொடா்பான 6, 6 ஏ, 6 பி, 7, 8 ஆகிய படிவங்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த முகாமை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தோ்வை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்து பேசினாா்.
அப்போது, கல்வி ஒன்றே நம் வாழ்வை வளமாக்கும். எனவே, பள்ளிப் பருவத்தில் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பொதுத்தோ்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. பொதுத்தோ்வை எவ்வித பயமும் இல்லாமல் நோ்மையாக எழுதுங்கள். அனைத்து மாணவ-மாணவிகளும் அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெறும் அளவுக்குப் படிக்க வேண்டும். ஒருவேளை தோ்வில் தோல்வி அடைந்தால் அதற்காக மனம் உடைந்து விடக்கூடாது.
தோல்விதான் வெற்றிக்கான முதல்படி என்பதை நினைத்து தொடா் முயற்சி செய்யுங்கள். உங்கள் பெற்றோருக்கு அடுத்த தோ்வில் நான் தோ்ச்சி அடைந்து விடுவேன் என்று நீங்கள் தான் தைரியம் சொல்ல வேண்டும். தன்னம்பிக்கை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை மறந்து வீடாதீா்கள் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன், திருவண்ணாமலை வட்டாட்சியா் துரைராஜ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.