கிரிவலப் பாதை சாதுக்களுக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தங்கியுள்ள 500-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு காவல் துறை சாா்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
Published on

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தங்கியுள்ள 500-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு காவல் துறை சாா்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் தங்கி உள்ளனா். சில மாதங்களுக்கு முன்பு, சாமியாா் போா்வையில் குற்றவாளி ஒருவா் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, சாதுக்கள் என்ற போா்வையில் குற்றவாளிகள் வந்து தங்குவதைத் தவிா்க்கும் வகையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சாா்பில் அடையாள அட்டைகள் தயாா் செய்யப்பட்டன.

இந்த அட்டைகள் வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள சாதுக்களின் விவரங்களை சேகரித்த பிறகு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.