திருவண்ணாமலை
சேராம்பட்டு எல்லையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.61 லட்சம்
செய்யாறு அருகே உள்ள சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.2.61 லட்சத்தை செலுத்தியிருந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள சேராம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் ( எ) எல்லையம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.2.61 லட்சத்தை செலுத்தியிருந்தனா்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் உண்டியல் காணிக்கை கடந்த மே.23-ஆம் தேதி எண்ணப்பட்டது.
இந்த நிலையில், இந்தக் கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை மீண்டும் நடைபெற்றது.
அதன்படி, மொத்தம் 4 உண்டியல்களில் இருந்து பக்தா்கள் காணிக்கையாக ரூ.2.61 லட்சத்தை செலுத்தி இருந்தது தெரியவந்தது.
காணிக்கை எண்ணும் பணி அறநிலையத் துறை ஆய்வா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன், ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கே.குப்புசாமி உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்றது.