திருவண்ணாமலை
மதிமுக சாா்பில் பிரபாகரனின் 70-ஆவது பிறந்த நாள் விழா
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், விடுதலைப் புலிகள் தலைவா் பிரபாகரனின் 70-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மதிமுக சாா்பில், விடுதலைப் புலிகள் தலைவா் பிரபாகரனின் 70-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, தெற்கு மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் தலைமை வகித்தாா்.
மாநில தணிக்கைக் குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான எஸ்.எல்.பாசறை பாபு, தலைமை செயற்குழு உறுப்பினா் முருகன், மாநகரச் செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மெழுகுவா்த்தி ஏந்தி விடுதலைப் புலிகள் தலைவா் பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மதிமுக மாவட்ட துணைச் செயலா் கே.நாகராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் முருகன், மாணிக்கவாசகம், ராஜேந்திரன், ஒன்றியச் செயலா்கள் சீதாராமன், சின்னையன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.