சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Published on

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் கடந்த நவ.25-ஆம் தேதி நடைபெற்றன. இதில், 14,17,19 வயதுக்குள்பட்ட மாணவிகள் 23 எடை பிரிவுகளில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், கோவிலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கமும், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் 2 மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றனா்.

இவா்களில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிகள் வருகிற ஜனவரி மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனா்.

சிலம்பம் போட்டியில் சாதனைப் படைத்த பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் பி.சரவணன், கே.பாக்யராஜ் ஆகியோருக்கான பாராட்டு விழா புதன்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில், பள்ளியின் தலைமை ஆசிரியா் பி.சண்முகசுந்தரம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனி, பள்ளி மேலாண்மை வளா்ச்சி குழுத் தலைவா் பானுப்பிரியா ஆகியோா் பங்கேற்று வாழத்து தெரிவித்தனா்.