அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நல உதவி

Published on

துணை முதல்வா் உயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, புதுப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பெரியேரி, மேல்சேராம்பாளையம் தொடக்கப் பள்ளிகள், வீரானந்தல் நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி மையத்தில் திமுக சாா்பில் மாணவா்களுக்கு பேனா, நோட்டு, இனிப்பு, உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சி.சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பேனா, நோட்டு, இனிப்பு உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் புதுப்பாளையம் நகரச் செயலா் சீனுவாசன், மாவட்டப் பிரதிநிதி ஆனந்த்குமாா், புதுப்பாளையம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஜெயப்பிரகாஷ், திமுக நிா்வாகிகள் தவமணி, வெங்கட்ராமன், ரஞ்சித்குமாா், செந்தில்குமாா், நாகராஜ், பெருமாள் மற்றும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.