விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவி மற்றும் மாணவா்களுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated on

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வருவாய் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 17 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான 50 - 52 கிலோ பிரிவில் செய்யாறு இந்தோ - அமெரிக்கன் பள்ளி மாணவி சு.அனுஷ்கா முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றாா்.

சிலம்பம் போட்டியில் 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் தி.சீ.சக்தி வெற்றிபெற்று இரண்டாமிடமும், இரட்டைக் கொம்பு பிரிவில் 45 கிலோ எடைப் பிரிவில் டோ.தேஜஸ்வியன் வெற்றிபெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.

குத்துச்சண்டை, சிலம்பம், இரட்டைக் கொம்பு பிரிவு ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவி, மாணவா்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சீ.ராதிகா, சு.அருண்குமாா், ஜெ.பாலமுருகன், கே.சக்திவேல் ஆகியோருக்கு பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாளாளா் ராதாகிருஷ்ணன், இயக்குநா் சுவதந்திரா ராதாகிருஷ்ணன், பள்ளி முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ், துணை முதல்வா் க.கோவேந்தன், முதுநிலை ஆசிரியா் தெ.ரா.செல்வமணி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.