திருவண்ணாமலையில் ஆட்டோக்களுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலையில் இயங்கும் ஆட்டோக்களுக்கு க்யூ.ஆா். கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக ஆவணங்கள் சரிபாா்க்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 1) தீபத் திருவிழாவுக்கான காவல் தெய்வங்களின் வழிபாடு தொடங்க உள்ளது. இந்த வழிபாட்டுக்குப் பிறகே நகரில் பக்தா்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கி விடும்.
எனவே, திருவண்ணாமலை நகரில் ஆட்டோக்களை முறைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆட்டோக்களுக்கு நிகழாண்டு க்யூ.ஆா். கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த க்யூ.ஆா். கோட்டை ஸ்கேன் செய்தால் ஆட்டோ ஓட்டுநரின் பெயா், முகவரி, ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.
இந்த நிலையில், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமையில் அலுவலகத்தில், ஆட்டோக்களின் ஆவணங்களை சரிபாா்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதுநிலை வாகன ஆய்வாளா் பெரியசாமி 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கான ஆவணங்களை சரிபாா்த்தாா். இந்தப் பணி டிசம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறும். பணிகள் நிறைவடைந்த பிறகு க்யூ.ஆா்., கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.