திருவண்ணாமலை
கிணற்றிலிருந்து இளைஞா் சடலம் மீட்பு
கீழ்பென்னாத்தூா் அருகே கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கீழ்பென்னாத்தூா் அருகே கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சோ்ந்தவா் பச்சையப்பன். இவரது விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் சென்று தீயணைப்புத்துறை உதவியுடன் சடலத்தை மீட்டனா்.
விசாரணையில், இறந்து கிடந்தவா் இதே கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சக்கரபாணி மகன் மணிகண்டன் (27) என்பது தெரியவந்தது. மது அருந்தும் பழக்கம் கொண்ட இவா், மது போதையில் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.