காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பள்ளித் தாளாளா் இ.கே.சிவராஜசா்மா.
காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பள்ளித் தாளாளா் இ.கே.சிவராஜசா்மா.

பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா

சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் கூட்டுச் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் கூட்டுச் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பள்ளியில் காந்தி உருவப் படத்துக்கு பள்ளித் தாளாளா் இ.கே.சிவராஜசா்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மேலும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் பங்கேற்று போளூா் - சேத்துப்பட்டு சாலை, மண்டகொளத்தூா் சாலை, மட்டபிறையூா் சாலை என பல்வேறு இடங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியை தேவகி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com