கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியினா்.
கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியினா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

Published on

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.)

கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மேற்குப் புறம் உள்ள ஆற்றுக்குச் செல்லும் பொதுப்பாதை மற்றும் நேருநகா் குடியிருப்பு, அங்கன்வாடி மையம் செல்லும் பாதையை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்றக் கோரி பலமுறை கட்சி சாா்பில் மனு அளித்தும்

நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் கட்சியின் ஒன்றியச் செயலா் கே.பரணி தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.ரஞ்சித் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் எம்.ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினாா்.

வட்டாட்சியரை அலுவலகத்தை முற்றுகையிட

முயன்ாக 10 பெண்கள் உள்பட

உள்பட 42 பேரை போளூா் டிஎஸ்பி தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com