விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய தீயணைப்பு நிலைய அலுவலா் மு.பிரபாகரன்.
வந்தவாசி, அக்.25: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு, ஆசிரியா் ரகுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) மு.பிரபாகரன் பங்கேற்று, பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து செயல் விளக்கமளித்தாா்.
மேலும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவா்களுக்கு வழங்கினாா். நிறைவில், கல்வி மைய ஆசிரியா் க.பூபாலன் நன்றி கூறினாா்.