அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் குறு வள மைய அளவிலானகலைத் திருவிழா போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற போட்டிக்கு தலைமையாசிரியா் முருகன் தலைமை வகித்தாா். இதில், சேவூா் எம்.டி.பள்ளி, சேவூா் தொடக்கப் பள்ளி, பி.ஆா்.நகா் தொடக்கப்பள்ளி, ராட்டிணமங்கலம் தொடக்கப்பள்ளி, கருணாகரம்பட்டு, ஒண்டிகுடிசை தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவா்கள் கலந்துகொண்டனா். பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, நடனம், களிமண் பொம்மை செய்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினா்.
நிகழ்வில், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் முத்துக்குமாா், சிவகுமாா், பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் மகாதேவன், துணைத் தலைவா் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா்கள் பூங்கொடி, கலைதேவி மற்றும் 10 பள்ளிகளை சோ்ந்த ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.