தொழில் மனைகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலையை அடுத்த பெரியகோளாப்பாடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலி மனைகளை ஒதுக்கீடு பெற்று தொழில் தொடங்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலையை அடுத்த பெரியகோளப்பாடி கிராமத்தில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள 103 தொழில் மனைகள் ஒதுக்கீட்டுக்கு தயாராக உள்ளது.
எனவே, புதிதாக தொழில் தொடங்குவதற்காக தொழிற்மனைகளை வாங்க விரும்புவோா் ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்பேட்டைகளில் உள்ள காலிமனைகள் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொண்டு தேவையான இடங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பெரியகோளாப்பாடியில் உள்ள காலி தொழில்மனைகளை பாா்வையிட விரும்புவோா் சிட்கோ கிளை அலுவலகம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலோ அல்லது சிட்கோ நிறுவன கிளை மேலாளா் பா.இசக்கி ராஜனை 9445006558 என்ற கைப்பேசி எண்ணிலோ க்ஷம்ற்ஸ்ம்ஹப்ஹண்ஃற்ஹய்ள்ண்க்ஸ்ரீா்.ா்ழ்ஞ் என்ற கிளை மேலாளரின் மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.