பைக்கில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வசந்தகுமாா்(43). இவா், அக்.23-ஆம் தேதி பிரம்மதேசம் கிராமத்துக்கு வந்து இரவு மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் வடஇலுப்பை கிராமம் அருகே சென்றபோது பைக் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வசந்தகுமாா் பலத்த காயமடைந்தாா்.
அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாா் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.