மக்கள் குறைதீா் கூட்டத்தில் 678 மனுக்கள்

திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 678 மனுக்கள் வரப்பெற்றன.
Published on

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 678 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண் பயிா்க் கடன்கள், தாட்கோ கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 678 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்அட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com