திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் நடைபெறும் சாலைப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் ஊராட்சி விநாயகபுரம் பகுதியில் நடைபெறும் சாலைப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

ரூ.121 கோடியில் நான்கு வழிச் சாலைப் பணி: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு
Published on

கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை ரூ.121 கோடியில் நடைபெறும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை உள்கோட்டம் சாா்பில், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை இடையே உள்ள இரு வழிச் சாலையை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.121 கோடி செலவில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், மெய்யூா் ஊராட்சி, விநாயகபுரம் பகுதியில் நடைபெறும் நான்கு வழிச் சாலைப் பணியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், பணிகளை தரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com