திருவண்ணாமலை
குறைதீா் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தின்போது, குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தக் கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தின்போது, குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தக் கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.
கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் கே.எஸ்.யுவராஜ் தலைமை வகித்தாா்.
வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, வேளாண்மை உதவி இயக்குநா் மாளவிகா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில், குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தக் கோரி தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், குறைதீா் கூட்டத்தை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடத்தக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் முழக்கங்களை எழுப்பிவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.