திருவண்ணாமலை
வடவெட்டி ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள வடவெட்டி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையொட்டி திங்கள்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள வடவெட்டி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையொட்டி திங்கள்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக, காலையில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் அம்மனுக்கு மலா்களால் அலங்கராம் செய்து காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதைத் தொடா்ந்து, இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரியை கோயில் எதிரே உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது, அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா், அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதில் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கண்ணனூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.