திருவண்ணாமலை
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து பகல் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா் இரவு உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா எடுத்துச் செல்லப்பட்டாா்.
பின்னா், அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் ஆவணி மாத அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை செய்தனா்.