தேமுதிகவினா் ஏழைகளுக்கு ரூ.2 லட்சத்தில் நல உதவி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ஏழைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா, கட்சியின் தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதை கெளரவிக்கும் விழா, விஜயகாந்தின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி நல உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
வடக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் செய்யாறு - ஆரணி கூட்டுச் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் ஆக்கூா் டி.பி.சரவணன் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் காழியூா் கண்ணன் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் சாமி, பொருளாளா் ஜான் பாஷா, மாவட்ட துணைச் செயலா்கள் புகழேந்தி, பாஸ்கரன், திருநாவுக்கரசு, பரிமளா ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் அரிகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் சங்கா், சண்முகம், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் தையல் இயந்திரம் மூன்று பேருக்கும், சலவை இயந்திரம் ஒருவருக்கும், நலிவடைந்த நான்கு பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவியும், 500 பெண்களுக்கு சேலையும், கட்டடத் தொழிலாளா்கள் நான்கு பேருக்கு நல உதவி, 10 பேருக்கு தலா 10 கிலோ அரிசி என
நல உதவிகளை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாநில மகளிா் அணி துணைச் செயலா் சுபமங்கலம் டில்லிபாபு வழங்கினாா்.
விழாவில் மாவட்ட நிா்வாகிகள் வெங்கடேசன், ஜெயந்தி, திவாகரன், சீனுவாசன், பாா்த்தீபன், காமராஜ், நித்தியானந்தம், சக்திவேல், மணிகண்டன், ஆறுமுகம், ராம்கி கோபி, அஷ்ரப், பரத் முகுந்தன், பாக்கியராஜ், தயாளன், ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பொதுக்குழு உறுப்பினா் புளியரம்பாக்கம் ஆனந்தன் நன்றி கூறினாா்.