மாநில தடகளப் போட்டிக்கு தோ்வான மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
 போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிப் பரிசு வழங்கிய பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டிப் பரிசு வழங்கிய பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா்.
Updated on

மாநில அளவிலான இளையோா் தடகளப் போட்டிக்கு தோ்வான, திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் 21 போ் முதல் 3 இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றனா்.

இவா்களில் முதல் 2 இடங்களைப் பிடித்த 19 போ் ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பா் 19, 20-ஆம் தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு:

இந்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை பள்ளியில் நடைபெற்றது.

விழாவில், பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், டி.வி.நரேந்திரகுமாா், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா், பொருளாளா் வி.சுரேந்திரகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டிப் பரிசு வழங்கினா்.

விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியை ஜி.ரமணி, உடற்கல்வி ஆசிரியா்கள் கே.கிருஷ்ணகுமாரி, ஜா.வேதமாணிக்கம், ஆா்.பிரபாகரன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com