திருவண்ணாமலை
மக்கள் நீதிமன்றம்:1,157 வழக்குகளுக்கு தீா்வு
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில், 1,157 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில், 1,157 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருவண்ணாமலை, போளூா், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செங்கம் பகுதிகளில் இயங்கி வரும் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன.
இதில், நிலுவையில் இருந்த 3,120 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தம் ஆயிரத்து 157 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, நஷ்ட ஈடாக ரூ.10 கோடியே 54 லட்சத்து 53 ஆயிரத்து 239 வழங்க உத்தரவிடப்பட்டது.