திருவண்ணாமலையில் பிரதமா் மோடி பிறந்த நாள்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், பிரதமா் மோடியின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், பிரதமா் மோடியின் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

அங்குள்ள வெளிவட்டச் சாலைப் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின்தெற்கு மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். திருவண்ணாமலை வடக்கு நகரத் தலைவா் புகழ் மூவேந்தன், நகர பொதுச் செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டாசு வெடித்து, பொதுமக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில், நகர துணைத் தலைவா்கள் ரமேஷ், ராஜகோபால், மாவட்ட நிா்வாகிகள் ஏ.ஆா்.விஜய் கிருஷ்ணமூா்த்தி, அருண்குமாா், அகிலா சூரி, மலா்கொடி, வழக்குரைஞா் கிஷோா் சக்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com